விற்பனைப் பிரிவு

கைத்தொழில் திணைக்களத்திற்கு உரிய  உற்பத்தித் தாபனங்களினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் மேல் மாகாணத்தில் வசிக்கும் கைப்பணியாளர்களினால்  உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பாவனையாளர்களுக்கு  விற்பனை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது விற்பனைப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.

கிராபிட் லங்கா விற்பனைச் சாலை  – மாகாணம் முழுவதும் கிராபிட் லங்கா தாபனம் என்ற பெயரில் 14 விற்பனைச் சாலைகள் ( ​களுத்துறை மாவட்ட-05 கொழும்பு மாவட்டம்- 04, கம்பஹா மாவட்டம் -05 )  விற்பனைப் பிரிவின் கீழ் பேணப்படுவதுடன்  இதை விட  நடமாடும் விற்பனைச் சாலைகளும்  இயங்குகின்றன. விற்பனைப் பொருட்கள் பிரதானமாக 2 வகைகளாகக் காணப்படுகின்றன..

  • கைத்தொழில் திணைக்களத்திற்குரிய ( மே.மா) நிலையங்களினால் மேற்கொள்ளப்படும்  உற்பத்தி (  கைத்தறி ஆடைகள். தும்பு, தோல், களி )
  • மேல் மாகாணத்தில் வசிக்கும் கைப்பணிக் கைத்தொழிலாளர்களடமிருந்து கொள்வனவு செய்யப்படும் உற்பத்திகள்.

மேலே குறிப்பிடப்பட்ட  விற்பனைச் சாலைகளின் ஊடாக  விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பின்வரும் முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன..

  • நாளாந்த காசுக்கு விற்பனை.
  • கடனின் அடிப்படையில் கைத்தறி ஆடைகளை அரச உத்தியோகத்தர்களுக்கு விற்பனை செய்தல்.
  • கட்டளைகளின் மூலம் விற்றல்.

மேற் குறிப்பிட்ட முறைகளின் மூலம் கிராப்பிட் லங்கா விற்பனைச் சாலைகளின் ஊடாக பொதுவாக வருடாந்தம் மேற்கொள்ளப்படும் விற்பனை  ரூபா 90 மில்லியன் அளவு ஆகும்.

விற்பனை செய்யப்பட்ட பொருட்களுக்காக பொதுவாக ரூபா 6 மில்லியன் அளவு நிதி   வருடாந்தம் கைப்பணிக் கைத்தொழிலாளர்களுக்கு செலுத்துவது இடம்பெறுகின்றது..