பணிப்பாளரின் செய்தி

மேல் மாகாணத்தினுள்  பாரம்பரிய கைத்தொழில்களைப் பாதுகாத்து,மேம்படுத்துவதை நோக்காகக் கொண்ட மேல் மாகாணத்தின் கைத்தொழில் திணைக்களம் 16 வருடகாலமாக தனது குறிக்கோளினை நோக்கி விரைவாகப் பயணிக்கின்றது.  உற்பத்தி மற்றும் பயிற்சிப் பிரிவுகள் 99 மற்றும் 14 விற்பனைப் பிரிவுகளைக் கொண்ட மேல் மாகாணத்தின் கைத்தொழில் திணைக்களம் 436 நிரந்தர பணியாட்களையும்  மற்றும் 600 தொழிலாளர்களையும் கொண்ட  வள நிறுவனமாகும்.

புடவை, மர,மென் பொறியியல், களி, தும்பு  ஆபரணம் வெட்டுதல், தையல் போன்ற  பாரம்பரிய கைத்தொழில் துறை மற்றும் இலத்திரனியல் தொழிநுடப்பம் கணினி, மின்தொழிநுட்பம் ​போன்ற அதி நவீன கைத்தொழில் துறைகளையும் ஒன்று சேர்த்து  மேற் கொள்ளப்படும்  பயிற்சி உற்பத்தி நடவடிக்கைகள் பல எங்களது துறைகளில் காணப்படுகின்றன.

மாகாணத்தின் பயிற்சியாளர்களுக்காக  பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல், உற்பத்தி நடவடிக்கைகளின் போது சேவை வழங்குனராகச் செயற்படல், உற்பத்திகளை விற்கும் போது வசதிகளை வழங்குதல், வருடாந்தப் போட்டிகள் மற்றும் கண்காட்சிகளை நடாத்துதல்.  பயிற்சியாளர்களை  ஊக்கப்படுத்தும்  நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்,  என்பன எங்களது பிரதான  விடயங்களாகும்.  எங்களது நிலையங்களில் சேவை செய்து நாளாந்தம் வருமானம் ஊழைக்கும் பாரம்பரிய கைத்தொழில் பயிற்சியாளர்களின் எண்ணிக்கை 600 இனை விட அதிகம் ஆகும். அவ்வாற்றே வருடாந்தம் ரூபா 100 மில்லியனை விட அதிக வருமானத்தினை   மாகாண  சபைக்கு வழங்க  எங்களது திணைக்களத்திற்கு  முடியுமாக இருந்தது. எங்களது பயிற்சியாளர்களினால் மேற்கொள்ளப்படும் பாடசாலை வாங்கு கதிரைகளின் பழுது பார்ப்பு,வைத்தியசாலை உபகரணங்களின் பழுது பார்ப்பு,   மற்றும் பாடசாலை அத்துடன் அற நெறிப்பாடசாலைகளின் பொருட்களின் உற்பத்தியின் மூலம் மேல் மாகாண  சபைக்கு  பெருமளவு  நிதியைச் சேமித்துக் ​கொடுப்பதற்கு   எங்களுக்கு இயலுமாக இருந்தது என்பதனை மன நிறைவுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

விரைவான  நவீன மயமாக்கலுக்கு உட்பட்டுள்ள மிகவும் சனநெருக்கம் நிறைந்த மேல் மாகாணத்தில் இருந்து விலகிச் செல்லும் பாரம்பரிய கைத்தொழிலினை  மக்களுக்கு சமீபமானதாக்கி பாதுகாத்து,பொருளாதார மேம்பாட்டிற்குத் தேவையான  நவீன கைத் தொழில்களை அறிமுகப்படுத்தி மேம்படுத்துதல் என்ற   சவால் மிக்க இலக்குகளை நோக்கி பயணிக்கும் மேல் மாகாணத்தின் கைத்தொழில் திணைக்கத்துடன்   ஒன்று சேர்ந்து உங்களது  எதிர்காலத்தினை சிறப்பாக்கிக் கொள்ளுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்